• May 18 2024

அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் மகள்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாபெரும் ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு தனி பாலிசியில் தன்னுடைய கெரியரை எந்தவொரு இடையூறும் இல்லாமல் இன்றளவும் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தோடு சிறப்பாக கொண்டு போகிறார்.

இப்போது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முழு மூச்சுடன் நடைபெற்று வருகின்றன.


படப்பிடிப்புத் தவிர்ந்த நேரங்களில் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகின்றார். இவர் கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்த கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.இதில் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது. 

அதை தொடர்ந்து தற்போது மகள் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.தனது தாய் ஷாலினியுடன் அனோஷ்கா எடுத்துக்கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


அனோஷ்காவின் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அனோஷ்கா பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கிறார் என்று கூறி, சினிமாவில் அவர் என்ட்ரி கொடுப்பாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement