• May 09 2024

லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகாது... விஜய் படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா..? ரசிகர்களுக்கு இடிபோல் வந்த செய்தி..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியாக அமைந்துள்ளது.


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் லியோ படத்தினுடைய அடுத்தடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இடி விழுந்தது போல் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதனைக் கேட்ட தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அது தமிழில் அல்ல ஹிந்தியில் மட்டுமே ரிலீஸ் ஆகாது. அதாவது ஹிந்தியில் முக்கியமான மூன்று மல்டிபிளக்ஸ்-ல் லியோ படத்தை திரையிடமாட்டோம் என திடீர் முடிவெடுத்துள்ளனர்.


அத்தோடு லியோ படத்தின் உடைய ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருப்பதால் ஒரு படம் வெளிவந்து 8 வாரங்களுக்கு பின் தான் ஓடிடி-ல் வெளியிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் லியோ படத்தின் ஹிந்தி வெர்ஷன் மட்டும் 4 வாரங்களில் ஓடிடி-ல் வெளியிடுவோம் என்று நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் ஹிந்தியில் லியோ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் ஆனது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement