• May 12 2024

பாலா காலில் விழுந்து கதறிய லைலா, ரம்பா மேல ரொம்ப பொறாமைல இருந்தாங்க- நடிகை லைலா குறித்த உண்மையை உடைத்த பிரபலம்

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் சிரிப்பழகி என்று அழைக்கப்பட்ட நடிகை தான் லைலா. இவர் பல முன்னனணி நடிகர்கள் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் சேர்த்துக் கொண்டவர். இந்த நிலையில் இவர் குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது.

லைலா ஒரு மாடல் அழகி, மும்பையை சேர்ந்த இவர் பாலிவூட்டில் சின்ன சின்ன காரக்டரில் தான் நடித்து வந்தார். பின்னர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கல்லழகர் என்னும் படத்தின் மூலம் தான் நாயகியாக அறிமுகமாகினார்.இப்படம் வெற்றி பெறவில்லை, ஆனால் லைலாவினுடைய காரெக்டர் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருந்திச்சு.


அதுக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நந்தா திரைப்படம் தான். இப்படத்தில் இலங்கைப் பெண் மாதிரியே நடிச்சிருந்தாரு. இவருக்கு இலங்கை பற்றி எந்த வரலாறும் தெரியாது. பாலா சொல்லுறதை எல்லாம் செய்யனும்.செய்யாமல் விட்டா திட்டுவாரு இதனால் லைலா ஹொட்டல்ல போய்ட்டு இருந்து பாலாவை திட்டுவாரு. நந்தா படத்தில இருந்து விலகிடலாம் என்று கூட யோசிச்சிருக்காரு.

பின்னர் படம் எடுத்த பிறகு படத்தை பார்த்திட்டு தியேட்டர்லையே லைலா அழ ஆரம்பிச்சிட்டாங்க, பாலா கால்ல எல்லாம் விழுந்து மன்னிப்புக் கேட்டாரு.இப்பிடி நல்லதொரு இயக்குநரைத் தான் நான் தப்பா நினைச்சு திட்டிட்டேன் என்று கவலைப்பட்டாரு இப்படம் ஹிட்டானதால் தான் அடுத்த படமான பிதாமகன் படத்தில் நடிக்கவும் லைலாவுக்கு வாய்ப்புக் கிடைச்சிச்சு.


லைலாவுக்கு கூட பிதாமகன் திரைப்படம் தான் பிடிக்கும். ஜோதிகா கூட சொல்லுவாங்க சூர்யாவுக்கு ஏற்ற ஜோடி என்றால் அது லைலா தான் என்று ஏன் என்றால் சூர்யா கூட நடிச்ச உன்னை நினைத்து, மௌம் பேசியதே,நந்தா, பிதாமகன் என எல்லாமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கு என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்  உன்னை நினைத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான் அதுக்கான போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி இருந்தாங்க இருந்தாலும் இயக்குநருக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட பிரச்சினையால் விஜய் அந்த படத்தில் இருந்து விலகிட்டாரு. லைலா எல்லா நடிகர் கூடவும் நடிச்சிருக்காரு, விஜய் கூட மட்டும் தான் இன்னும் நடிக்கவே இல்லை என்றார்.

அத்தோடு லைலா ரம்பா தயாரிப்பில் உருவான த்ரீ ரோசஸ் என்னும் படத்தில் நடிச்சாங்க. அந்த படத்திற்கு டைமுக்கு வராமல் எல்லா இடத்திலையும் சொதப்பிட்டு இருந்தாங்க. ரம்பா கூட ஒரு பேட்டியில் சொல்லி இப்பாங்க, லைலாவுக்கு நான் படம் தயாரிக்கிறேன் என்பதால் பொறாமை வந்திடுச்சு என்று சொனல்லி கவலைப்பட்டிருக்கிறார்.


லைலா நல்ல நல்ல படங்களில் நடிச்சிட்டு இருக்கும் போதே நடிச்சது போதும் என்று ஈரான் தொழிலதிபரை கல்யாணம் பண்ணி போய்ட்டாங்க பின்னர் வெப் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது திரும்ப நடித்து வருகின்றார். இனி நல்ல நல்ல படங்களில் நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement