• Apr 28 2024

திருமணக் கோலத்தில் ஜொலிக்கும் டிடி.- புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதினைப் பெற்றவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி.


திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த அரசி, செல்வி போன்ற சீரியல்களில் டிடி நடித்துள்ளார். பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி... என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 


இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற உதவியது. அந்தவகையில் ஜூலி கணபதி, நள தமயந்தி, பவர் பாண்டி, சர்வம் தளமயம், காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

திவ்ய தர்ஷினியின் சொந்த வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து கொண்டனர்.


சமூகவலைத்தளங்களில் எப்போது ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் டிடி அட்டை விளம்பரத்திற்காக கல்யாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement