• Jan 19 2025

முத்துவுக்கு குடுகுடுக்காரன் சொன்ன குட் நியூஸ்.. விஜயாவுக்கு ஷாக் கொடுத்த பாட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, எங்க உங்க அப்பா.. இதுவரைக்கும் இங்க வந்ததே இல்ல என ரோகிணியிடம் முத்து கேட்க, இப்ப எதுக்கு அது எல்லாம் கேக்குற என விஜயா சொல்ல, இல்ல எனக்கும் தான் சந்தேகமா இருக்கு ..ஒரு போன் கூட பேசினது இல்ல என அண்ணாமையும் சொல்கிறார்..

உடனே ரோகிணி அவர் பிஸியா இருக்கார் அங்கிள் பிசினஸ் விஷயமா வெளிய போய் இருக்காரு என்று கூற விஜயாவும் அவர் ஒரு நாள் வர தானங்க போறாரு என்று சொல்லி சமாளிக்கிறார்.  

அதன்பிறகு, மீனாவுக்கு தந்தூரி சிக்கன் முத்து வாங்கிட்டு வர, என்னங்க இது வெளியிலிருந்து எல்லாம் வாங்கிட்டு வாறன்.. அதுவும் அவன் பொண்டாட்டிக்கு மட்டும் தனியா என்று கேள்வி கேட்க, இங்க அவள் எல்லாருக்கும் பிடிச்சத பார்த்து பார்த்து செய்றா..அவளுக்கு என்ன பிடிக்கும் என்று ஒரு நாள் கூட யாரும் கேட்டது இல்லையே.. அதான் நான் வாங்கிட்டு வந்தன் என்று சொல்லி மீனாவை ரூமுக்குள் கூட்டிச் செல்கிறார்.

மறுநாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்ப, மீனா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க அங்கு குடுகுடுக்காரன் வந்து குறி சொல்லுகிறார். அதன்படி, இனி உனக்கு நல்ல காலம்.. விடிய போகும் போது உன் பொண்டாட்டியை முகத்துல முழிச்சிட்டு போ என சொல்ல இருவரும் சந்தோசப்படுகின்றனர்.

பிறகு நீங்க கோவத்தை மட்டும் குறைச்சுக்கிட்டா இந்த கோட்டையை ஆளலாம் என்று சொல்ல முத்து நூறு ரூபாயை புரிந்து கொண்டு உனக்கு அம்பது ரூபாய் போதும் என துரத்தி விடுகிறார்

அதன் பிறகு மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாட்டி போன் செய்து ரவிக்கு ஒரு நல்ல இடம் வந்து இருக்கு, பொண்ணு வீட்டுக்காரர்களை கூட்டிட்டு ஊருக்கு வரேன் என்று சொல்ல மீனா வேண்டாம் பாட்டி என்று முட்டுக்கட்டை போட நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே என்ன ஆச்சு என்ன விஷயம் என்று கேட்க மீனா ரவிக்கு கல்யாணம் ஆன விஷயம் அண்ணாமலை கைது செய்யப்பட்டது, நெஞ்சுவலி வந்து ஆப்ரேஷன் நடந்தது என எல்லா விஷயத்தையும் உடைத்து விடுகிறார்.

இதனால் பதறிப் போகும் பாட்டி உடனடியாக சென்னைக்கு கிளம்பி வருகிறார். விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌


Advertisement

Advertisement