• Apr 30 2024

துப்பாக்கியால் சுட்ட K.S ரவிக்குமார்; மருத்துவமனையில் ரம்யா கிருஸ்ணனின் அம்மா! - நடந்த சம்பவம் என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களின் கிங்காக வலம் வந்த பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் பகிர்ந்த கதை இதோ!

நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஏற்றுமதி சார்ந்த பிசினஸ் செய்து கொண்டிருந்தேன்.அதாவது இங்குள்ள படங்களை மலேசியா.சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வேன். அங்கு பிரபாகர் நாயர் என்ற ஒருவர் இருந்தார் அவர் நான் வழங்கும் படங்களை அங்கு ரிலீஸ் செய்தார். 

எஃப். எம்.எஸ் ரைட்ஸை வாங்குவதற்காக நாங்கள்  தமிழ் மலையாள படங்களுக்கு தான் அட்வான்ஸ் கொடுப்போம்.  அந்த படங்கள் தொடர்பான ஷூட்டிங் நடக்கிறதா என்று பார்க்கச்செல்வோம். அப்படி நான் பார்க்கும் சமயத்தில்,  அங்கு டைரக்டர் என்ற ஒருவரின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு வேலை செய்வது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் எனக்கு டைரக்ஷன் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது

என் நண்பன் அசோக்குமார் இணைந்த கோடுகள் என்ற ஒரு படத்தை எடுத்தான்; அந்த படத்தில் நான் வேலை செய்தேன். அதில் தான் என்னுடைய பெயர் உதவி இயக்குனர் எஸ் ரவி என்று வந்தது. அங்கு என்னை பார்த்த சிலர் இன்னும் சில படங்களில் என்னை வேலை பார்க்க பரிந்துரை செய்தனர்.அப்படித்தான் ராமதாஸிடம் இரண்டு படங்கள் வேலை செய்தேன்.நாகேஷ் உடன் வேலை செய்தேன். 

அந்த படத்தில் ஆனந்த் பாபு ஹீரோவாக நடித்தார். ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த படம் இரண்டாவது படம். அந்த படத்தின் போது ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாகேஷ் உடைய வீடு மிகவும் பெரியது.ரோட்டில் இருந்து மிகவும் உள்ளே செல்ல வேண்டும். அந்த வீட்டின் மாடியில்  ‘கண்ணை சிமிட்டும் கட்டழகு’ என்ற பாட்டுக்கு ரிகர்சல் நடந்து கொண்டிருந்தது. ரம்யா கிருஷ்ணனின் அம்மா பால்கனியில் நின்றார். அப்போது நாகேஷின் கடைசி பையன் வீட்டு வேலைக்காரிடம் ஒரு டின் டப்பாவைக் கொடுத்து அதை கையில் வைத்திருக்கும் துப்பாக்கிக் கொண்டு ஷூட் செய்து கொண்டே இருந்தான். ஆனால் குண்டு படவே இல்லை. உடனே நான் அதை வாங்கிச் சுட்டேன். அது பட்டுவிட்டது. டின்னை மாற்றி மாற்றி வைப்பான். நான் குறி வைத்து சுடுவேன். அது பட்டு விடும். 

எப்படி என்று கேட்பான்; அதற்கு,நான் என்சிசி கேப்டன் என்று சொன்னேன். அப்போது தூரத்தில் நின்ற ரம்யா கிருஷ்ணனின் அம்மா கையை காண்பித்து எங்கே இங்கே சுடு பார்க்கலாம் என்றார். 

நான் அவரது கைக்கு குறி வைத்தேன். ஆனால் அது அவரது வலது தோள்பட்டையில் பட்டது. உடனே அவர் கையில் படவில்லையே என்று கிண்டல் செய்தார்கள். உடனே அடுத்ததாகவும் துப்பாக்கி வைத்து குறி வைத்தேன். ஆனால் நான் முன்னதாக சுட்ட இடம் அவர்களுக்கு சிவப்பாக மாறியது தெரிந்தது. 

உடனே நான் பதறி அடித்து என்ன நடந்தது என்று பார்க்கச்சென்றேன்.  அப்போதுதான் அந்த புல்லட் ஈய புல்லட் என்பது தெரிய வந்தது. உடனே, நான் எனது பைக்கில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு போனேன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் புல்லட் உள்ளே இருக்கிறது. எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அத்துடன் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..தற்போது வலிக்கு மாத்திரை கொடுக்கிறேன்; பின்னால் கூட எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த மருத்துவர் சொன்னார். 

சரி என்று சொல்லிவிட்டு இருவரும் வீட்டுக்கு கிளம்பினோம். இரவு 12 மணிக்கு என் வீட்டிற்கு போலீசார் வந்தனர். எனது அப்பா மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார். நடந்த சம்பவத்தை சொல்லி அவர்கள் தரப்பிலிருந்து ஏதோ விளையாட்டாக செய்தது.. அப்படி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டனர்; ஆகையால் அதையே உங்களது மகனிடமும் எழுதி வாங்க வந்துள்ளோம் என்று சொன்னனர். அதன் பிறகு எழுதி நான் கையெழுத்து போட்டு கொடுத்தேன். போட்டுக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பா ஒரு அரை விட்டார்” என்று பேசினார். 





Advertisement

Advertisement

Advertisement