• Sep 28 2025

நான் நாயகனாக காரணம் யார் தெரியுமா.? உண்மையை உடைத்த KPY பாலா.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த நாயகனாக உருவாகியுள்ளவர் தான் KPY பாலா. ‘கலக்கப்போவது யாரு’ மூலம் பிரபலமான இவர், தற்போது சினிமா, யூடியூப் என பல தளங்களில் தனது திறமையை பரப்பி வருகிறார்.


அவரின் நகைச்சுவை, நடிப்புத்திறமை, மற்றும் மனதைக் கவரும் கியூட் Personal Branding என்பன மூலம் இன்று ஒரு இளம் பிரபலமாக மாற்றியுள்ளார்.

அதுபோல, சமீபத்தில் KPY பாலா வெளியிட்ட ஒரு உணர்ச்சிப் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்து பகிர்ந்த கருத்துகள் தான் மக்கள் மனதை மிகவும் தொட்டுள்ளது.


KPY பாலா அதன்போது, “நடிகர் ராகவா லாரன்ஸ் தான் தன்னை நாயகன் ஆக்கினார் எனவும் ஜிம்மிற்கு சென்று உடலை மாற்றியதற்கும் அவரே காரணம்...." என ராகவா லாரன்ஸை பாராட்டியுள்ளார். இந்த வார்த்தைகள் ராகவா லாரன்ஸின் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துகின்றன.


Advertisement

Advertisement