• Sep 27 2023

முன்னணி நடிகர்கள் பலருக்கு ரெட் கார்டு.. அதிர்ச்சியில் கோலிவுட் ரசிகர்கள்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஒரு சில முடிவுகளை முன்வைத்துள்ளனர். 


அதாவது நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு எதிராக ரெட் கார்டு வழங்கத் தீர்மானித்துள்ளனர். அந்தவகையில் சிம்பு மீது ஏற்கெனவே பல முறை புகார்கள் எழுந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கோள்காட்டி இருந்தனர்.


அதேபோன்று, நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பணத்தை முறையாக கையாளததால் விஷாலுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது நடிகர் தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி அவருக்கு, ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. இவ்வாறாக முன்னணி நடிகர்கள் பலருக்கும் ரெட் கார்டு வழங்கியுள்ளமை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement