• Jan 19 2025

600 தியேட்டர்களில் ரீ ரிலீஸான கில்லி.. முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான  திரைப்படங்களில் கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் ஒன், மேரி கிறிஸ்மஸ், லால் சலாம், சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், டேவில், மறக்குமா நெஞ்சம், வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர் ஆகிய படங்கள் வெளியான போதிலும் அவை விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் தோல்வியைத் தான் தழுவியன.

இதன் காரணமாக தியேட்டர்கள் ஏற்கனவே வெளியான சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த காலங்களில் வெளியாகி ஹிட்டான சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து வசூலை அள்ளி வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பின் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் கோடிக்கணக்கில் வாரிக் குவித்து வருகின்றன.


இளைய தளபதி விஜய்க்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், கில்லி படத்தை சர்வதேச அளவில் கொண்டாடி வருகின்றார்கள். இப்படத்தை தியேட்டர் பார்த்த ரசிகர்கள் முதல் ஷோ பார்ப்பது போலவே தியேட்டரில் கொண்டாடி தீர்த்துள்ளார்கள்.


600க்கும் மேற்பட்ட தியேட்டர்களை வெளியான கில்லி படத்தை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வரும் நிலையில், இதன் முதல் நாள் வசூல் மட்டுமே 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்த படத்தின் ரீ ரிலீஸ் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், த்ரிஷா, கஸ்தூரி ஆகியோர் உட்பட்ட பலர் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement