• May 29 2023

175 நாட்கள் ஓடிய குஷி.. டெஸ்ட் ஷூட்டிலேயே லிப் லாக் காட்சி...மறக்க முடியுமா அந்த சீனை..போட்டோ இதோ!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

அஜித்தின் வாலி படத்தை முடித்த கையோடு விஜய்யின் குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு கிடைத்தது.

விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அந்த படத்தை இளமைத் துள்ளலாக இயக்கி இருந்தார் எஸ்.ஜே. சூர்யா.

கடந்த 2000ம் ஆண்டு வெளியான குஷி படம் நேற்றுடன் 23 ஆண்டுகளை கடந்த நிலையில், குஷி படத்தின் கிளைமேக்ஸ் லிப் லாக் காட்சிக்கு முன்னதாகவே டெஸ்ட் ஷூட்டிங்கிலேயே நடந்த லிப் லாக் ஒத்திகை போட்டோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யா இந்த ஆண்டு வெளியான வாரிசு படத்தில் கேமியோ ரோலில் நண்பராக நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளார்.

இந்த நட்புக்கு அஸ்திவாரமே எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி தான். அந்த படம் வெளியாகி நேற்றுடன் 23 ஆண்டுகள் ஓடிவிட்டன.

நடிகர் விஜய் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் கூட இப்படியொரு லிப் லாக் காட்சியில் நடித்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நடிகர் விஜய்யையும் நடிகை ஜோதிகாவையும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக லிப் லாக் காட்சியில் நடிக்க வைத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருப்பார் எஸ்.ஜே. சூர்யா.

அதற்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த படங்களில் கூட இந்த அளவுக்கு ஒரு லிப் லாக் காட்சி இடம்பெற்றிருக்குமா? என்பது சந்தேகம் தான்.

குஷி படம் வந்த புதிதில் மட்டுமல்ல பல ஆண்டுகள் டிவியில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு பல வீடுகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்சார் செய்யப்பட்டு விடும்.

அந்த பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலே ரிமோட் சேனல் அனிச்சையாக வேறு சேனலுக்கு மாறிவிடும். மும்தாஜ் உடன் அந்தளவுக்கு படு ரொமான்ஸாக நடிகர் விஜய் ஆட்டம் போட்டிருப்பார்.

அந்த பாடல் காட்சியை எடுக்கும் போதே, விஜய் மற்றும் ஜோதிகாவின் கிளைமேக்ஸ் காட்சிக்கான லிப் லாக் டெஸ்ட் ஷூட்டிங்கையும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன. அந்த இடுப்பு சீன் காட்சிகளும், ஓடி வந்து விளக்கை காப்பாற்றும் காட்சிகளும், லெட்டரில் இருப்பதை விஜய் சொன்னதும் ஜோதிகா திட்டும் காட்சிகளையும் ரசிகர்கள் திரும்ப திரும்ப போட்டு இப்படியொரு லவ் படம் இனிமேல் வருமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement