• May 19 2024

விஜய தசமி தினத்தில் கலா மாஸ்டர் வீடிற்கு சென்றது யார்? - வைரலாகும் புகைப்படம்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

 இந்திய சினிமாவில் நடன இயக்குநராகத் திகழ்பவர் கலா மாஸ்டர். இவர் இந்திய ரியாலிட்டி டான்ஸ் டேலண்ட் ஷோவான, மானாட மயிலாடவின் இயக்குனராகவும் உள்ளார். அத்துடன் அந்த ஷோவின் மூன்று நடுவர்களில் ஒருவர். 2000 ஆம் ஆண்டில், கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நாட்டுப்புற நடனக் காட்சிகளை தயார்படுத்தியமைக்காக சிறந்த நடன அமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.


அதுமட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு நடனப் பயிற்சி வழங்கியுள்ளார். அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் பிரபல்யம் பெற்ற இவரது நடனத் திறமை தனித்துவம் வாய்ந்தது ஆகும்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது பதிவுகளை பகிர்ந்து கொள்வார்.  தற்போது விஜயதசமி நிகழ்விற்கு தனது வீட்டுக்கு வந்த நண்பர்களைக் குறித்த புதிய பதிவு ஒன்றை அப்டேட் செய்துள்ளார்.

அதில் அவர் தனது நண்பர்கள் வீட்டுக்கு வந்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், அவர்களுடன் நேரத்தை செலவிட்டது. தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது


Advertisement

Advertisement