• Sep 19 2024

கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா"... இரண்டாம் நாள் வசூல் விபரம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்திசுரேஷ். பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ராகு தாத்தா திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளிவந்தது. 


இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சுதந்திர தினம் அன்று தங்கலான், டிமான்ட்டி காலனி 2 போன்ற படங்கள் வெளியான அதே நாளில் ரகு தாத்தா திரைப்படம் வெளியானதால் இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களும் காட்சிகளும் மிகக் குறைவுதான். 


இது ஒரு காமெடி கலந்த நல்ல மெசேஜ் சொல்ல கூடிய திரைப்படமாக இருக்கிறது. ரசிகர்கள் பார்த்த வரையில் கீர்த்தின் நடிப்பு நன்றாகவுள்ளதாக கூறிவருகின்றனர். இந்நிலையில் ரகு தாத்தா திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 35 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

Advertisement

Advertisement