• Jun 02 2024

நடிகர் நானியுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்- தசரா படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்-

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகரான நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தசரா’.இந்தப் படத்தை  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாகிறது. 

இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். நடிகை பூர்ணாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்நிலையில் 'தசரா' படத்தின் முக்கிய நாளை காலை 11.11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அநேகமாக அது படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் ஆகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக நானி நடிப்பில் வெளியாகிய ஷ்யாம் சிங்கா ராய், 'அன்டே சுந்தரானிகி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதால் இப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement