• May 05 2024

விஜய்யை பாலோ செய்த முதல் பிரபலம் கீர்த்தி சுரேஷ்.. ஆச்சரியத்தில் தளபதி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் வாரிசு படத்தினைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். சினிமாவில் படு பிஸியாக இருந்து வருகின்ற விஜய் இதுவரை காலமும் எந்தவொரு சமூக வலைதளப் பக்கங்களிலும் இணைந்திருந்ததில்லை.


இதனிடையே நேற்றைய தினம் விஜய் இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்துள்ளார். ஆரம்பமே அட்டகாசம் என சொல்லும் அளவிற்கு மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் இன்ஸ்டாகிராமிலும் தனது சாதனை பயணத்தை தொடங்கி இருக்கிறார். 


அதாவது இன்ஸ்டாகிராமில் இணைந்த மிகக் குறுகிய நேரத்தில் வேகமாக ஒரு மில்லியன் ஃபாலோவர்களை கடந்த நட்சத்திரமாக தளபதி விஜய் தனது முதல் சாதனையை படைத்துள்ளார். அந்தவகையில் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாவில் விஜய்யை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் இன்ஸ்டாவில் இணைந்ததும் அவரைப் பாலோ செய்த முதல் பிரபலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம். இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இவர்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜய்யை கீர்த்தி சுரேஷ் பாலோ செய்வது வியக்கத்தக்க ஒரு விடயம் தான்.

Advertisement

Advertisement

Advertisement