• Sep 30 2023

அனிருத்துடன் விரைவில் திருமணம்..? உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்து பிஸியான ஒரு நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ்  என பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து இருந்தார்.


இந்நிலையில் சமீபகாலமாக சினிமா நடிகைகள் பலரும் திருமணம் செய்து வருகின்றனர். நிக்கி கல்ராணி, நயன்தாரா திருமணங்களை தொடர்ந்து ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தற்போது நடிகை தமன்னாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.


அந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். அதாவது இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில்  சிக்கிய வண்ணம் தான் இருந்து வருகின்றார். அந்த வகையில் ஆரம்பத்தில் நடிகர் விஜய்யும், கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது இசையமைப்பாளர் அனிருத்தும், கீர்த்தி சுரேஷும் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஏற்கெனவே இவர் இருவரையும் இணைத்து செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள விளக்கத்தில் "என்னுடைய திருமணம் குறித்து பரவும் தகவல் முற்றிலும் தவறானது. அனிருத் எனக்கும் மிகவும் நல்ல நண்பர்" எனக்கூறியுள்ளார். மேலும் திருமணம் எப்போது எனக் கேட்டதற்கு 'திருமணம் நடக்கும்' என மொட்டையாக பதிலளித்துள்ளார். எனவே கீர்த்தி சுரேஷ் கூறியதை வைத்துப் பார்க்கும் போது அனிருத்துடன் கல்யாணம் என்பது வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement