• May 10 2024

பிரமாண்டமாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. வெளியான பிரத்யேக புகைப்படங்கள்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் வலம் வருபவர் தான் கருணாஸ்.இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் தொடர்ந்து நந்தா, திருடா திருடி, வில்லன், அட்டகாசம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக கலக்கி வந்தார்.


அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளை உள்ளிட்ட பல படங்களில் காமெடி கலந்த ஹீரோவாக நடித்து வந்தார். குணசித்திர கதாபாத்திரங்களில் இவர் சமீப காலமாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனது மகன் கென் கருணாஸை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்பாவுக்கு பெருமை சேர்த்தார் கென் கருணாஸ்.


பாடகி கிரேஸை நடிகர் கருணாஸ் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த தம்பதியினருக்கு கென் எனும் மகனும் டயானா என்கிற மகளும் பிறந்தனர். இந்நிலையில், சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு சர்ச்சில் பிரம்மாண்டமான முறையில் தனது மகளின் திருமணத்தை நடிகர் கருணாஸ் நடத்தி வைத்துள்ளார். அதன் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.


கோட் சூட் அணிந்து தனது மகளின் கைகளை பிடித்துக் கொண்டு தேவாலயத்தில் மணமகன் அருகே கருணாஸ் கொண்டு செல்லும் அழகிய தருணங்களின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 



Advertisement

Advertisement

Advertisement