சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பி.வாசு இயக்க லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு முன்பே வெளியிட்டது.
அத்தோடு சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது பாலிவூட் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் பல சினிமா பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம் எதிர் வரும் செப்டம்பர் 28-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. சந்திரமுகி பாகம் இரண்டின் ட்ரெல்லார் ரிலீஸ் அரிக்க ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே படத்தின் சில பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பாலிவூட் நடிகை கங்கனா ரனாவத் அவர்களின் " நீ கோசமே .." என்னும் ஒரு பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது.
Listen News!