• Sep 13 2024

பிக்பாஸ் பிரபலத்துடன் கைகோர்க்கும் நடிகர் கவின்- அடடே இவர் புதுமாப்பிள்ளையாச்சே...

stella / 11 months ago

Advertisement

Listen News!

திரையுலக வாழ்க்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த க்யூட் நடிகைகளில் ஒருவர் தான் ப்ரியங்கா மோகன்.க்ரிஷ் கிரிஜா ஜோசி இயக்கத்தில் வெளியான ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.இதனை அடுத்து தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

அதன்படி  நானிக்கு ஜோடியாக நடித்த கேங் லீடர் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.பின்னர் தமிழில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். 


இதைத்தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் பிரியங்கா மோகன் கவின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிவபாலன் இயக்கும் இந்த படத்தை நெல்சன் தயாரிக்கவுள்ளார். 


இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சமீபத்தில் திருமணமான கவனுக்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    


Advertisement

Advertisement