• May 10 2024

ஹெலிகாப்டரில் வந்து மாஸ் காட்டிய கமல்ஹாசன் - வைரல் வீடியோ.. .!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்பொழுது விக்ரம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிரூத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் 2022 Cannes Film Festival நடந்து வருகிறது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசனும் அங்கு சென்றுகிறார், மேலும் அந்த Cannes பட விழாவில் விக்ரம் படத்தின் NFT வெளியிடப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே தற்போது அந்த விழாவிற்கு கமல் ஹெலிகாப்டரில் போய் இறங்கியுள்ள வீடியோ தான் வைரலாகி இருக்கின்றது. செம மாஸ்ஸாக அவர் என்ட்ரி கொடுத்துள்ள வீடியோவை நீங்களே பாருங்கள்.

https://twitter.com/KamalismForever/status/1526859164772859904?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1526859164772859904%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fkamal-mass-entry-to-cannes-film-festival-1652867755

Advertisement

Advertisement

Advertisement