• Oct 09 2024

தளபதி 68 இல் நடிக்க விஜய்க்கு நோ சொன்ன ஜோதிகா! படத்தில் கொடுக்கப்பட்ட ஹாரக்டர் தான் காரணமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் லியோ படத்தினை தொடர்ந்து பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் . இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், தளபதி 68 மட்டுமில்லாமல், ஒரே காரணத்திற்காக இன்னொரு விஜய் படத்திலும் ஜோதிகா நடிக்க நோ கூறியதும் அதற்கான காரணம் குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது.


அதன்படி, இப்படத்தில் அப்பா, மகன் கேரக்டர்களில் விஜய் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், ப்ரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக விஜய் ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. கோலிவுட்டின் க்யூட்டான ஜோடிகளில் விஜய்யும் ஜோதிகாவும் ரசிகர்களின் ஃபேவரைட் எனலாம்.

குஷி, திருமலை படங்களில் ரசிகர்களை கவர்ந்த விஜய், ஜோதிகா காம்போ, அதன்பின்னர் இணையவில்லை. ஆனால், அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அதற்கு ஜோதிகா தரப்பில் இருந்து நோ சொன்னதாகக் கூறப்படுகிறது. அப்போது சொன்ன அதே காரணத்திற்காக தான், இப்போது தளபதி 68 படத்திலும் நடிக்க மறுத்துவிட்டாராம் ஜோதிகா.


 விஜய்க்கு அம்மாவாக நடிக்க முடியாது என நோ சொல்லிவிட்டாராம். இப்போது தளபதி 68 படத்திலும் அப்பா விஜய் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தான் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

தனது கேரக்டர் குறித்து தெரிந்த பின்னரே தளபதி 68ல் இருந்து விலகிவிட்டாராம் ஜோதிகா. அதனால், அவருக்குப் பதிலாக புன்னகை அரசி சினேகாவிடம் தளபதி 68 படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

அதன்பின்னர் அபிஸியலாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு அம்மாவாக நடிக்க முடியாது என்பதற்காகவே இரண்டு முறை ஜோதிகா நோ சொல்லியது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Advertisement