• May 11 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி.இவர் நடிக்கும் படங்கள் மக்கள் மனதை தொட்டு விடும் என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் ஜெயம் ரவி நடிப்பிலும் கல்யாண் இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் அகிலன். இப்படத்திற்கு மறைந்த பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதை வைத்து இப்படம் உருவாகி வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

மேலும் அதிரடி காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்.அதேபோல் நடிகை பிரியா பவானி சங்கர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் அனைவரையும் வந்துள்ளதாகவும் டீசர் ரிலீஸ் ஆகி பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.youtube.com/embed/8PPADWsLSPs

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement