• Jun 25 2024

நடிகை பிரணிதாவிற்கு குழந்தை பிறந்தாச்சு-ஆணா..பெண்ணா…? இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் நடிகர் கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை பிரணிதா.இவர் ஒருசில படங்களில் நடித்து இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தவிர சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

அத்தோடு தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படத்தையும் பதிவிட்டு வருவார் .இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement