• Jan 19 2025

ஜெயம் ரவிக்கு 2வது திருமணமா? அதுக்குள்ள பத்திக்கிச்சே..! வாயை அடக்க சொன்ன பிரபலம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் ஜெயம் ரவி. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பின்பு குறுகிய காலத்திற்கு உள்ளையே வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார்.

2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை  திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் தற்போது புயல் வீச ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம்ரவி அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, தனக்கு இந்த விவாகரத்து தொடர்பில் எதுவும் தெரியாது. இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். ஆனாலும் ஜெயம் ரவி அதற்குப் பிறகு வழங்கிய பேட்டியில் இரண்டு வீட்டாரும் பேசித் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆர்த்திக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று உண்மையை உடைத்து இருந்தார்.


இந்த விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் ஜெயம் ரவியுடன் ஆர்த்தி பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆனால் அது பயனளிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. ஜெயம் ரவி தற்போது தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், மும்பையில் வசித்து வரும் ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்வாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஒருவேளை ஆர்த்தி தனது அம்மாவை விட்டு ஜெயம் ரவி வீட்டுக்கு வந்து வாழ்ந்தால்தான் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து நாம் எதுவும் பேச வேண்டாம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement