• Apr 30 2024

பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகம் எடுத்தால் "வெள்ளை முடி மற்றும் தாடிக்கு டை அடித்து விட்டு வருவேன்- ஜெயம் ரவி சொன்ன தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


அப்போது பொன்னியின் செல்வன் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விக்ரம், பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகத்தில் ஆதித்த கரிகாலன் குறித்து இருக்கும். நான் ஹீரோ. கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பார். அப்போது ஜெயம் ரவி சிறு வயது" என கூற, உடனே ஜெயம் ரவி, "வெள்ளை முடி மற்றும் தாடிக்கு டை அடித்து படத்தில் நடிக்க வந்துவிடுவேன். பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகம் எடுத்தால் ஏகப்பட்ட கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கலாம். அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் புதினத்தில் அம்சங்கள் உள்ளன" என ஜெயம் ரவி பதில் அளித்தார்.


Advertisement

Advertisement

Advertisement