• May 07 2024

ட்ரெடிஷனல் உடையில் மனைவி ஆர்த்தியின் தாலிக்கு குங்குமம் இட்ட ஜெயம் ரவி! வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவூட்  சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் ஜெயம் ரவி தனது 30வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஆண்டனி  இயக்கத்தில், ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். யோகி பாபு காமெடியனாக இந்த படத்தில் நடிக்கிறார்.

செல்வக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராக பணிபுரிகிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை இயக்குகிறார்‌. ஜெயம் ரவியின் அத்தை சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் வீட்டில் நடந்த பூஜைகளில் கலந்தூ கொண்ட நபர்களுடன் எடுத்த புகைப்படங்களும் விசேஷ தருணங்களும் இடம் பெற்றுள்ளன. 

பாரம்பரிய பட்டு உடையில் ஜெயம் ரவி , ஆர்த்தி தோன்றி இருந்தனர். தாலிக்கு குங்குமம் இட்ட ஜெயம் ரவியின் காலில் விழுந்து ஆர்த்தி ஆசிர்வாதம் வாங்கினார். இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் கலந்து கொண்டனர். 



Advertisement

Advertisement

Advertisement