விஜய்யின் 'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து ஜவான் படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது ஜவான் படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்த டிரைலரை உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தான் ரிலீஸ் பண்ணுகின்றனர்.
இதனையடுத்து ரசிகர்களுக்கு ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!