• Sep 26 2023

விஜய் அரசியலுக்கு வந்தால் நான் இதைப் பண்ணுவேன்... பிறந்தநாளில் விஷால் சொன்ன ஸ்பெஷல் நியூஸ்..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் கடைசியாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்காததால் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


விஷாலைப் பொறுத்தவரையில் இவர் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் விஷால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷாலிடம் விஜய்யின் அரசியல் பயணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில் "நான் விஜய் ரசிகன், விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அவரை வாழ்த்துவேன். மக்களுக்கு சேவை செய்யும் அனைவருமே அரசியல்வாதிகள் தான், அரசியல் என்பது பணியோ தொழிலோ இல்லை, சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த வயதிலும் திரையில் ஏராளமான சாதனை படைத்து வருகிறார்" என்றார்.


அதுமட்டுமல்லாது "45 ஆண்டுகளு க்கு முன் கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் நடிகர் ரஜினி மக்களை இன்றுவரை மகிழ்வித்து வருகிறார்" எனவும் கூறியுள்ளார். மேலும் தேசிய விருது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் "மக்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு தான் மகத்தான விருது" என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement