• Sep 30 2023

நந்தினியை ஓங்கி அறையப் போன கதிர்... வேடிக்கை பார்க்கும் குணசேகரன்... ஜீவானந்தத்தை தேடிப் போகும் மருமகள்கள்.. பரபரப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் ஜீவானந்தம் மனைவியை குணசேகரன் திட்டத்தால் ஜீவானந்தம் மனைவி உயிரிழந்ததை மனதில் வைத்து கொலை செய்ததை மனதில் வைத்து கதிரை பயங்கரமாக திட்டி சண்டை பிடிக்கின்றார். ஜீவனந்தம் குறித்த உண்மையை தான் நந்தினி உளறுகிறார் என்பதை நினைத்துப் பயந்த ரேணுகா "தாராவை இவங்க அண்ணன் கீழே தூக்கி போட்டு விடுவேன் என மிரட்டியதை பற்றி தானே சொல்ற" எனக் கேட்டு கதையை திசை திருப்பி விடுகின்றார். 


அதனைக் கேட்ட கதிர் "எங்க அண்ணன் இதை வெளியே தூக்கி போட்டால் கூட பரவாயில்லை. அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு" எனக் குணசேகரனுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசுகின்றார். அதற்கு தாரா "அவர் யாரு ? அவருக்கு ரைட்ஸ் இல்ல" என கூறுகின்றார். இதனைக் கேட்டதும் கதிர் தாராவை அடிக்க வருகின்றார். இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குணசேகரன் நந்தினி, ரேணுகாவை கீழே கூப்பிடுகின்றார்.

அவர்களை அழைத்த குணசேகரன் அவர்களிடம் "அப்பத்தாவை பார்த்து பேசி சொத்தை வாங்கிற வேலையைப் பார்க்குமாறு கூறுகின்றார். பதிலுக்கு கதிர் "இவளுங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். நாம பாத்துக்கலாம்" என அதட்டிக் கூறுகின்றார். அதற்கு குணசேகரன், நமக்கு காரியம் தான் முக்கியம். நீ கொஞ்சம் அமைதியா இரு பா. நான் ஒண்ணுக்கு இரண்டு பிரஷர் மாத்திரை சாப்பிட்டு உயிரை கையில் பிடித்து வைத்து இருக்கிறேன் எனக் கூறுகின்றார்.

இதனைக் கேட்ட நந்தினி "நீங்க உயிரோட இருந்தா தானே மாமா மத்தவங்க உயிரை எடுக்க முடியும்" என்று கூற கதிர் உடனே அவளை அடிக்க கை ஓங்குகிறான். இதனைப் பார்த்த விசாலாட்சி அடிக்க விடாது தடுத்துவிடுகிறார். 

இதன் பின்னர் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மற்றும் ஜனனி வீட்டில் இருந்து அப்பத்தாவை சந்திப்பதற்காக கிளம்பிச் செல்கின்றனர். அப்போது ஜனனி "அப்பத்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் ஜீவானந்தத்தோடு தான் இருப்பார்" எனக் கூறுகின்றார். 

அதற்கு ரேணுகா, உங்களுக்கு ஒன்னும் சங்கடமா இல்லையே. உங்களுக்கு தெரிந்தவர் என சொன்னீங்க. மறந்துபோன பழசை எல்லாம் ஞாபக படுத்துற மாதிரி இல்லையா என ஈஸ்வரியிடம் கேட்கின்றார். பதிலுக்கு ஈஸ்வரி, அவர் என்னுடைய வாழ்க்கையில் கடந்து போக கூடிய ஒரு நபராக தான் இருந்தார். அப்போ பார்த்த முகம் எனக்கு இப்போ ஞாபகத்திலேயே இல்லை. இப்போ நான் அவரைப் பார்த்தது தான் மனதில் நிற்கிறது" என்கிறார்.


மேலும் "அன்னைக்கு அவர் இந்த விஷயத்தை சொல்லி என்னை காயப்படுத்தணும்னு நினைக்கவில்லை. எனக்கு தெரிய வைக்கணும் என்பதுதான் அவரின் முக்கிய நோக்கமாக தெரிந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சங்கடம் அதுவும் என்னை சார்ந்த ஒரு நபரால் நடக்கும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை" என மிகவும் வருத்தத்துடன் கூறுகின்றார்.

மறுபுறம் ஜனனியை கௌதமுக்கு போன் செய்து ஜீவானந்தம் எங்கே இருக்கிறார் எனக் கேட்குமாறு ரேணுகா கூற, உடனே ஈஸ்வரி கௌதமுக்கு போன் செய்கிறாள். போனை ஃபர்ஹானா எடுத்து பேசுகிறார். அவரோட ஈஸ்வரி ஜீவானந்தம் இருக்கும் இடம் பற்றி கேட்கின்றார். அதற்கு பர்கானா முதலில் முடியாது என சொல்லிவிட்டு பிறகு அவரை நீங்கள் எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக்கூடாது. இது வேறு யாருக்கும் தெரிய வைக்கவும் கூடாது என கூறிவிட்டு ஜீவானந்தம் இருக்கும் இடம்பற்றிக் கூறுகின்றார். 

இதனைத் தொடர்ந்து ரேணுகா, ஈஸ்வரி, நந்தினி அனைவரும் ஜீவானந்தத்தை பார்க்க செல்கிறார்கள். இவ்வாறாக  இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement