தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்
இயக்கும் முதல் படத்தில் நடிக்கும் நாயகன் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது
கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திரைக்கதை அமைக்கும் பணியை முழுவதும் ஜேசன் சஞ்சய் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிக்கும்
நட்சத்திரங்கள் தேர்வில் ஜேசன் சஞ்சய் பிசியாக இருப்பதாக கூறப்பட்டது.
முதலில் இந்த படத்தில் விஜய்
சேதுபதி நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு கவினிடம்
பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், பின்னர் ஜெயம் ரவி இந்த படத்தில்
நடிப்பார் என்றும் கூறப்பட்டது. மேலும் அதர்வா உள்பட ஒரு சில நடிகர்களிடம்
பேசிய நிலையில் தற்போது இறுதி கட்டமாக ஹீரோ துருவ் விக்ரம்
என்பது கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. அதேபோல் இந்த படத்தின் ஹீரோயின்
அதிதி ஷங்கர் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில்
வெளியாகும் என்றும் வரும் மே அல்லது ஜூன்
மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு
தொடங்கும் என்றும் இரண்டு அல்லது மூன்று ஷெட்யூலில் இந்த படத்தை முழுவதுமாக
முடிக்க ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!