• Apr 07 2026

ஸ்கூல் படிக்கும் போதே இப்படியா? டீப்ஃபேக் வலையில் சிக்கிய ஜான்வி கபூர்.. லீக்கான தகவல்கள்

shali / 2 days ago

Advertisement

Listen News!

ஜான்வி கபூர் தனது டீன் வயதில் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், 15 வயதில் இருந்த போது தன்னைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட டீப்பேக் புகைப்படம் ஒரு ஆபாச இணையதளத்தில் இருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பள்ளியில் ஐடி வகுப்பின் போது நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “அப்போது சில மாணவர்கள் அந்த மாதிரியான இணையதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் என் படங்கள் இருந்ததை பார்த்தேன். அது உண்மையா அல்லது டீப்பேக்கா என அப்போது எனக்கு புரியவில்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறியுள்ளார். இந்த அனுபவம் அவருக்கு மனஅழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நேரங்களில் அதிகாரபூர்வ செய்தி தளங்களில் கூட அவர் அணியாத உடைகள் அல்லது செய்யாத போஸ்களில் உருவாக்கப்பட்ட படங்கள் பகிரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது போன்ற டீப்பேக் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூரின் இந்த உருக்கமான பகிர்வு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணைய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

Advertisement

Advertisement