• May 14 2024

முக்கிய நபரின் பெயரைக் கூறிய ஜனனி... அதிர்ச்சியில் ஆடிப்போன கௌதம்... இனி நடக்கப்போவது என்ன..? சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதில் ரேணுகா நந்தினியிடம் "இனிமேல் அவர்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்கிற வேலையே இல்லடி, இதுதான் செய்யப்போறோம் என்று இன்போர்மஷன் கொடுத்திட்டுப் போய்ட்டே இருப்போம்" என்கிறார்.  


மறுபுறம் ஜனனி, சக்தி ஆகியோர் கௌதமுடன் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது சக்தி "ஜனனிக்கிட்ட அப்பத்தா ஒரே பெயரை திரும்பத் திரும்ப சொல்லி அவங்கள போய் பாருன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்திருக்கார்" எனக் கூறுகின்றார்.


அதற்கு கௌதம் "யார் அது" எனக் கேட்கின்றார். பதிலுக்கு ஜனனி "ஜீவானந்தம்" என்கிறார். அந்தப் பெயரைக் கேட்டதும் கௌதம் ஷாக் ஆகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement