• May 28 2024

என்னுடைய பிறந்த நாளை சிறப்பாக்கியது உங்கள் வாழ்த்து தான்- கமல்ஹாசனின் டுவிட்டால் மகிழ்ச்சியில் ஷங்கர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக திரைப்படங்களை இயக்கக் கூடிய இயக்குநர் தான் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் பாய்ஸ் இந்தியன் அந்தியன் ஐ சிவாஜி எந்திரன் 2.0 நண்பன் ஆகிய அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.


இந்த நிலையில் இவர் தறடபொழுது தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து rc 15 என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. அது தவிர இந்தியன் 2 படத்தையும் இறக்கவுள்ளார்.

இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


அந்த வகையில் கமல்ஹாசன் ஷங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டரில், இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் @shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு, இயக்குநர் ஷங்கர், நிச்சயமாக ‘இந்தியரே’.

என் பிறந்தநாளை

சிறந்த நாளாக்கியது

உங்கள் வாழ்த்து

மிக்க நன்றி @ikamalhaasan சார் என நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement