• May 10 2024

இதைக் கேட்க நல்லாத் தான் இருக்கு ஆனால் அது உண்மையில்லை- ரசிகர்களுக்கு தனது பாணியில் விளக்கம் கொடுத்த பிக்பாஸ் ராஜு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியானது 5 சீசன்களைக் கடந்துள்ளது. மேலும் 6வது சீசன் விரைவில் ஆரம்பமாகவும் உள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராகப் பங்கு கொண்டு டைட்டில் வின்னர் பிரபல்யமானவர் தான் ராஜு ஜெயமோகன். இவர் டான் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பான ஓபனிங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனாலும் அவரை நல்ல கேரக்டர்களில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சீரியல்களில் நடித்து வந்த இவர் சீரியல்களில் நடிப்பதை விட்டு விட்டு தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள சர்தார் படத்தில் ராஜூ முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கடந்த சில தினங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகின.

இதனால் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்த விஷயத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று அவர் ஆனால் இந்த விஷயம் கேட்கவும் பார்க்கவும் நன்றாகத்தான் உள்ளது என்றும் அவர் தன்னுடைய பாணியில் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் சர்தார் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement