• Apr 27 2024

திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆச்சு... இன்னும் நான் அதை செய்யல... குடும்ப ரகசியத்தை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இடையே காதல் வருவதும், அது கல்யாணத்தில் முடிவதும் சகஜமான ஒன்றாகி விட்டது. அந்தவகையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இல் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபல பாடகர் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 


இவர்களது திருமணம் கொரோனா காலத்தில் நடந்தது. திருமணம் முடிந்து தற்போது 1½ ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். 


இந்த நிலையில் பிரபல டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது அவர் கூறுகையில் "நான் வீட்டில் சமையல் செய்வது இல்லை.

திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் எனது வீட்டில் நாங்கள் முதன்முதலாக வாங்கிய கியாஸ் சிலிண்டர் காலியாகவில்லை. அந்த சிலிண்டர் இன்னும் பல மாதங்களுக்கு உபயோகமாகும் நிலையில் உள்ளது" என்றார். 


இதன்மூலம் நிவேதிதா வீட்டில் சமையல் செய்வதே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் "வீட்டில் சமைக்காவிட்டால் சாப்பாடு எங்கிருந்து வருகின்றது" எனக் கேட்டு அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement