• Dec 04 2022

என்ன ஒரு அழகு..பாவாடை தாவணியில் கவர்ச்சியில் தெறிக்க விட்ட பூஜா ஹெக்டே..வைரலாகும் புகைப்படம்

Listen News!
lathushan / 1 month ago
image
Listen News!

பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.


அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார். அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகையும் ஆகியுள்ளார். தற்போது தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். 


இந்நிலையில் பாவாடை தாவணியில் கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்...