• Dec 07 2022

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை நடிகையாக மாற்றிய இயக்குநர்-ஓ..சம்பவம் அப்பிடிப்போகுதா..?

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

இன்று எத்தனையோ நடிகைகள் முன்னணி இடத்தை பிடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இந்த நடிகைக்கு ஈடாக இன்னொருவர் வர முடியாதென்னும் அளவுக்கு அனைவரையும் கவர்ந்தவர் தான் இந்த நடிகை. தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை இவருடைய புகழ் பரவி இருக்கிறது.

மேலும் அவர் வேறு யாரும் அல்ல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கொடிகட்டி பறந்த நடிகை சில்க் ஸ்மிதா தான். இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவருக்கான இடம் மட்டும் திரையுலகில் அப்படியே தான் உள்ளது. தன்னுடைய நடன திறமையாலும், போதை ஏற்றும் கண்களாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் நடிகையாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.

வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவரை திரையுலகிற்கு கொண்டுவந்து சேர்த்த பெருமை நடிகர் வினுசக்கரவர்த்திக்கு மட்டுமே உண்டு.மேலும்  ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு இவர் திரைக கதையும் எழுதி இருக்கிறார். அந்த வகையில் வண்டி சக்கரம் படத்தில் கிளாமர் பாடலுக்கு ஆட ஒரு நடிகை தேவைப்பட்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் முன்னணி நடிகைகளை ஆட வைக்கலாமென்று கூற வின்சக்கரவர்த்தி புதுமுக நடிகை தான் வேண்டுமென்று கூறியிருக்கிறார். அப்போது அவருடைய வீட்டில் ஒரு பெண் மாவு அரைத்து கொண்டிருந்தாராம். அந்தப் பெண் இவரை பார்த்த பார்வையில் ஒரு காந்தம் இருந்திருக்கிறது. அதில் மயங்கிய அவர் அந்த பெண்ணை பற்றி விசாரித்துள்ளார்.

தான் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் தன்னுடைய பெயர் விஜயலட்சுமி என்றும் அவர் சொன்னாராம். உடனே வினுசக்கரவர்த்தி அந்த பெண்ணிடம் சினிமாவில் நடிக்க விருப்பமா என்று கேட்டு இருக்கிறார். உடனே அவரும் நான் எங்கள் ஊர் திருவிழாக்களில் டான்ஸ் ஆடி இருக்கிறேன், எனக்கு சினிமாவில் நடிக்க பிடிக்குமென்று கூறி இருக்கிறார். அதன் பின்னர் அவரை பார்த்த இயக்குநரும், தயாரிப்பாளரும் அசந்து போய் இருக்கின்றனர்.

மேலும் இந்தப் பெண் ஒட்டுமொத்த திரையுலகையும் கலங்கடிக்க போகிறார் என்றும் கூறியிருக்கின்றனர். அதன்பின்னர் சில்க் ஸ்மிதாவாக அறிமுகம் ஆகிய விஜயலட்சுமி முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி தன்னுடைய வசீகரத்தால் ரசிகர்களை கவர்ந்தார். இப்படியாக உச்சாணி கொம்பில் இருந்த சில்க் ஸ்மிதா இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.