• Sep 30 2023

மாமன்னன் படத்தில் உதயநிதி நடிச்சது ரொம்ப தப்பு- சர்ச்சையைக் கிளப்பிய பிரபல இயக்குநர்

stella / 1 month ago

Advertisement

Listen News!


கர்ணன், பரியேறும் பெருமாள் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.உதயநிதியின் கடைசி படம் இது என்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்ததோடு இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது. 


இந்நிலையில் இயக்குநர் பேரரசு தற்பொழது அளித்திருக்கும் பேட்டியில் 'உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்திருக்க கூடாது என கூறி இருக்கிறார்.மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி கமல் முன்னிலையிலேயே பேசுகிறார். அந்த சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என கூறி இருக்கிறார்.

 அதனால் இந்த படத்தில் வில்லனாக காட்டப்பட்டது தேவர் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை சொல்லிவிட்டார். அவர் அப்படி பேசாமல் இருந்திருந்தால் ரத்னவேல் என்ன ஜாதி என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது.


"உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் அவர் என்ன ஜாதி என சொல்லி இருக்கலாம், அவர் அமைச்சராக இருக்கிறார், அவருக்கு எல்லா ஜாதி காரர்களும் ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர் இந்த மாதிரி ஜாதி படத்தில் நடித்தது ரொம்ப தப்பு" என அவர் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement