• Sep 26 2023

நடிகை சித்தாரா திருமணம் முடிக்காமல் இருப்பதற்கு இவர் தான் காரணமா?- பயில்வான் ரங்கநாதன் கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 month ago

Advertisement

Listen News!

 1986ம் ஆண்டு காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை சித்தாரா. இவர் தமிழில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகின்றார்.

புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புதுவசந்தம், புரியாத புதிர் என்று புதிது புதிதாக பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார், குறிப்பாக இவர் நடிப்பில் 1990ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் என்ற திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.


இவர் குறிப்பாக படையப்பா படத்தில் ரஜனிகாந்தின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.இது தவிர தொடர்ச்சியாக பல படங்களில் அக்கா, அம்மா என்று பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.இந்நிலையில்  பயில்வான் ரங்கநாதன் அண்மையில் அளித்த பேட்டியில் சித்தாரா குறித்து கூறியுள்ளார்.

அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாகவே பல ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாரா, தொடக்க காலத்திலேயே கவர்ச்சியாக நடிப்பதற்கு மறுத்துவிட்டார் அதனால், அவருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 


இந்த சூழலில் தான் கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது அதீத பக்தி கொண்டு, இறுதியில் அவர் ஒரு பெண் சாமியாராகவே தற்பொழுது மாறிவிட்டார் என்று கூறியுள்ளார். அண்மை காலங்களாக அவர் படங்கள் நடிக்காததற்கும் அதுதான் காரணம் என்று அவர் ஒரு தகவலை கூறியுள்ளார்.

மேலும் அவர் திருமணம் செய்துகொள்ளாதது குறித்து பேசிய ரங்கநாதன், ஒரு பேட்டியில் சித்தாரா பேசியதை மேற்கோளிட்டு பேசும் பொழுது "அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் பல ஆண்டுகள் அந்த காதல் கைகூடாமல் இருந்த நிலையில், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement