பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா வீட்டுக்கு வந்த பொலீஸ் பொண்ணு விருப்பம் இல்ல என்று தான் எங்களுக்கு கால் வந்ததாக சொல்லுறார். அதுக்கு கோபி அப்படி எல்லாம் இல்ல என்று சொல்லுறான். அதைக் கேட்ட பொலீஸ் என்னவா இருந்தாலும் பொண்ணோட விருப்பம் இல்லாம கலியாணம் செய்றது தப்பு என்கிறார். பிறகு ஈஸ்வரி இனியாவோட விருப்பத்தோட தான் இங்க எல்லாம் நடக்குதுனு சொல்லுறாள். பின் விருப்பம் இல்லாத பொண்ணு இப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்து நிப்பாளா என்று கேக்கிறார்.
அதைத் தொடர்ந்து இனியாவோட அம்மா இந்த பாக்கியா இருக்கா எல்லோ அவளுக்குத் தான் இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்ல என்கிறாள். அதைக் கேட்டு பொலீஸ் நான் உங்கட குடும்பக் கதை எல்லாம் கேக்க இங்க வரல என்கிறார். பிறகு இனியாவப் பாத்து உனக்கு இந்த கலியாணத்தில சம்மதமா என்று கேக்கிறார்.
அதுக்கு இனியா உங்களுக்கு கால் பண்ணதே நான் தான் என்கிறாள். அதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் தனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் கூட பழகினான் அதைப் பிடிக்காமத் தான் இந்த கட்டாயக் கலியாணத்த செய்யுறாங்க என்று சொல்லுறாள். இதைக் கேட்டு நிச்சயம் செய்ய வந்தவர்கள் யாரயோ லவ் பண்ண பொண்ண எங்கட பையனுக்குக் கட்டிக் கொடுத்து பையன்ர வாழ்க்கைய கெடுக்கப் பாக்குறீங்க என்று சொல்லி அங்க இருந்து கோபமாப் போகிறார்கள்.
பின் பொலீஸ் பொம்மிபிளப் பிள்ளைக்கு பிடிக்காம கலியாணத்த பண்ணியிருந்தா நீங்க எல்லாரும் ஜெயிலுக்குப் போய் இருக்க வேண்டியது தான் என்கிறார். இதைக் கேட்டு செழியன் எல்லாரும் எல்லாம் இல்ல அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் என்கிறான். பின் ஹோட்டலுக்குப் போய் நடந்ததெல்லாத்தையும் செல்விக்குச் சொல்லுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!