• May 06 2024

AK62 படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இல்லையா?வெளியானது அதிர்ச்சி தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் ‘ துணிவு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிமாக AK62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.



இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.படத்தில்  அரவிந்த் சாமி, சந்தானம், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள்  படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி இருந்தது .ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அஜித்தின் சினிமா கேரியரில் 180 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள நிலையில், அதிர்ச்சியான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னவெனில் , AK62 படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இல்லையாம் .அவருக்கு பதிலாக படத்தை பிரபல இயக்குநர் விஸ்னு வரதன் இயக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

 படத்தின் கதை விக்னேஷ் சிவன் உடையது தானம். ஆனால் படத்தை விஸ்னு வரதன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதியான தகவலா..? அல்லது வதந்தி தகவலா என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுவரை காத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement