நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நடிகர் யோகி பாபு, தற்போது நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ள இந்தப் படம், வித்தியாசமான கதைக்களம் மற்றும் உணர்வுபூர்வமான திரைக்கதையுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும், நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி மற்றும் அனாமிகா மஹி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘சாமி தந்த வரமே’ பாடல் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. டி. இமானின் இனிமையான இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி பாபுவை முழுநீள நாயகனாக காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ‘சாமி தந்த வரமே’ பாடல் வெளியாகும் செய்தி கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Listen News!