• May 03 2024

லியோ படத்தில் விஜய்யின் காரெக்டர் இது தானா?- படத்தின் சீக்ரெட்டை உடைத்த ரத்னகுமார்

stella / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துவரும் திரைப்படம் தான் லியோ.இப்படத்தின் ஷுட்டிங் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகியது.

அதன்படி முதலில் 52 நாட்கள் காஷ்மீரின் பல இடங்களில் நடைபெற்றது. அதிகமான காட்சிகள் அங்கு எடுக்கப்பட்ட நிலையில், சென்னையிலும் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. படத்தின் பிரம்மாண்டமான பாடலாக நா ரெடி பாடல் உருவான நிலையில், ஏறக்குறைய 2000 நடனக்கலைஞர்களை வைத்து இந்தப் பாடல் எடுத்து முடிக்கப்பட்டது.


 இந்நிலையில் விரைவில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் இசை வெளியீடு சென்னையில் இல்லாமல் இந்த முறை மதுரையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திறந்தவெளி மைதானத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்கும்வகையில் இந்த இசை வெளியீடு திட்டமிடப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டது.

 இந்தப் படத்தில் நடிகர் விஜய் வயதான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரது கெட்டப் வீடியோக்களும் வெளியான நிலையில், நா ரெடி பாடலில் அவரின் இளமையான லுக்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


இந்நிலையில், இந்தப் படத்தில் நெருப்பு மற்றும் ஐஸ் இவற்றின் ஐடியாவை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளதாக படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் அப்பாவி குடும்ப தலைவராகவும் அதிரடி கேங்ஸ்டராகவும் விஜய் இரண்டு கேரக்டர்களில் கலக்கலான நடிப்பை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 இவர் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். முன்னதாக மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கும் இவர் வசனம் எழுதியுள்ளார். இயக்குநராகவும் மேயாத மான், ஆடை, குலுகுலு போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement