• May 05 2024

96 படத்தில் வந்த தேவதர்ஷினியின் மகளா இது?- ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே....

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்து பிரபல்யமானவர் தான்  நடிகை தேவர்தர்ஷினி.இவர் மர்மதேசம், ரமணி vs ரமணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கின்றார். அதே போல காக்க காக்க, காஞ்சனா, 96 போன்ற பல படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


தேவதர்ஷினி கடந்த 2002 -ம் ஆண்டு நடிகர் சேத்தனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நியதி என்ற மகள் உள்ளார்.சேத்தனும் தமிழில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இறுதியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் வில்லனாக நடித்ததிருந்தார்.


அத்தோடு நியதி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான 96 படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.


சோசியல் மீடியா பக்கத்தில் தேவதர்ஷினி தன்னுடைய மகள் எடுத்து கொண்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த சிறுமியா இது? என்று வியந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement