• Sep 08 2024

GOAT படத்தில் விஜயகாந்தின் கெட்டப் இது தானா? வெளியானது AI டெக்னாலஜியில் மிரட்டும் லுக் போஸ்டர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம்.

இந்த படத்தில் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி மறைந்த நடிகர் விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

அண்மையில் அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய்க்கு 68வது படமாக காணப்படுவது தான் கோட் திரைப்படம். இதற்கான சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இந்த நிலையில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை ஏஐ  டெக்னாலஜி மூலம் இந்த படத்தில் நடிக்க வைத்த செய்தி ஏற்கனவே வைரலான நிலையில், விஜயகாந்தின் ஏஐ லுக் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் கோட் திரைப்படத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சீன்களில் விஜயகாந்த் மாஸாக நடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும் விஜயகாந்த் கேரக்டர் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இவ்வாறான நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தின் கெட்டப் எப்படி இருக்கும் என ஒரு போஸ்டர் தற்போது உலா வருகிறது.

அதாவது, நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகிய ராணுவ உடையில் மெஷின் கன் வைத்து மிரட்டலாக போஸ் கொடுத்து இருந்தனர்.

தற்போது அதில் கேப்டன் விஜயகாந்த் இருப்பதாக ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement