• Apr 26 2024

கதாநாயகனாகும் கவுண்டமணியின் புதிய பட டைட்டில் இதுவா?!-பூஜையுடன் வெளியான புகைப்படங்கள்..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து 90வரையான காலகட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கவுண்டமணி.அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருக்கும் காமெடி கிங் என்று சொன்னாலும் மிகையாகாது.

 சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி பழனிச்சாமி வாத்தியார்" என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார், நந்தகோபால் R.K. சுரேஷ்,மதுரை  டாக்டர் சரவணன்,மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார்,  ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்  எழுதி இயக்குகிறார் திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன். wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குநராக ராஜா பணியாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் நடிக்கும் "பழனிச்சாமி வாத்தியார்" படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


.

Advertisement

Advertisement

Advertisement