• May 07 2024

இந்த வாய்ப்பிற்காக விஜய்க்கு அழுத்தம் கொடுத்த த்ரிஷா... காரணம் இது தானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் அமைந்த 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது அவரின் திறமையினால் தான்.


அறிமுகப்படத்தை தொடர்ந்து ஏறத்தாள 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது வம்சி இயக்கத்தில் அமைந்த 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'தளபதி 67' படத்திலும் நடிக்கவுள்ளார்.


இப்படத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கப்போவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது 'கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி' ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது 'தளபதி 67' இல் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மறுபடியும் த்ரிஷா பெற்றுள்ளார்.



இந்நிலையில் தற்போது இது தொடர்பாக மற்றுமோர் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்று வெளிவந்திருக்கின்றது. அதாவது இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு அழுத்தம் கொடுத்துத்தான் பெற்றுள்ளாராம் த்ரிஷா. அதுமட்டுமல்லாது அப்போது தான் தனக்கு மீண்டும் முன்பு போல் சினிமாவில் மார்க்கெட் உயரும் என்று எண்ணி விஜய்யிடம் இந்த வாய்ப்பை கேட்டுப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதனால் தான் விஜய் 'தளபதி 67' இல் நடிக்கும் வாய்ப்பை த்ரிஷாவிற்கு கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதில் விஜய்க்கு த்ரிஷா அழுத்தம் கொடுத்தது என்பது எந்த அளவிற்கு உண்மையான விடயம் என்று தெரியவில்லை. ஆனால் விஜய்யிடம் த்ரிஷா படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டது உண்மை தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

Advertisement

Advertisement

Advertisement