காந்தி கண்ணாடி படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் KPY பாலா. சின்னத்திரையில் தனது காமெடி மூலம் பிரபலமான இவர், சமூக சேவையிலும் தன்னை முன்னிலைப்படுத்தி பன்முகத்திறமையாளராக திகழ்ந்து வருகின்றார்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி காந்தி கண்ணாடி படம் வெளியானது. இந்த படத்தை ஷெரீஃப் இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது 4 கோடியை எட்டி உள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்தப் படம் ஒரு மெசேஜ் கமர்சியல் படம் என்பதால் மக்களுக்கான சமூக விழிப்புணர்வையும், நல்ல நோக்கம் கொண்டதாகவும் எடுக்கப்பட்டுள்ளது. காந்தி கண்ணாடி படத்தில் தனது உணர்வு பூர்வமான கதை ஆக்கத்தில் ஒரு நடிகராகவும் வெற்றி பெற்றுள்ளார் பாலா.
எனினும் காந்தி கண்ணாடி படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றும், அதற்காக வைக்கப்பட்ட கட் அவுட்கள் உடைக்கப்பட்டதாகவும் தெரிவித்த பாலா, விமர்சகர்கள் கூட இந்த படத்தை கண்டு கொள்ளவில்லை என்று தனது வேதனையை தெரிவித்திருந்தார் .
மேலும் பெரிய பெரிய படங்களுக்கெல்லாம் ரிவ்யூ பண்ணும் விமர்சகர்கள் சிறிய படங்களுக்கும் பண்ண வேண்டும். அப்போதுதான் மக்களிடம் சென்று சேரும் என தெரிவித்தார் .
இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் பாலாவின் கருத்துக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார். அதாவது பாலாவிற்கு மிகப்பெரிய மனசு உள்ளது. அவர் நல்ல மனிதர். பாலா ஜெயித்தால் அவரால் இங்கு நிறைய மனிதர்கள் பிழைப்பார்கள்.
தற்போது பாலா நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி படம் விமர்சகர்களால் விமர்சிக்கப்படவில்லை. ஏனென்றால் பாலா மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காகவே.. இந்த படத்தின் இயக்குனர் தொடர்ந்து இந்த படத்தை முடக்க சதி செய்கின்றார்கள் எனக் கூறி வருகின்றார்.. பாலாவுக்கு எதிரிகள் இல்லை. தேவை இல்லாமல் யார் மீதும் பலி சொல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.
Listen News!