• Sep 11 2025

இன்னும் 50 வருஷம் ஆனாலும் என்னோட படங்கள் போர் அடிக்காது! கே. எஸ் ரவிக்குமார் பகிர்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்பவர்  கே.எஸ் ரவிக்குமார்.  இவர் இயக்குநர் விக்ரமன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கின்றார். 

1991 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அதன் பின்பு சரத்குமார் நடிப்பில் சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.  இந்த படம்  அவருக்கு மிகப்பெரிய சிறப்புமுனையை ஏற்படுத்தியது.  அப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

மீண்டும் சரத்குமாரை வைத்து நாட்டாமை படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றி அவரை முன்னணி இயக்குநராக உருவாக செய்தது. அதன் பின்பு கமல், ரஜினி  ஆகியோரையும் வைத்து படங்களை இயக்கினார். 


இதை தொடர்ந்து விஜய், அஜித், சிம்பு,சூர்யா என  அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றி உள்ளார் கே .எஸ் ரவிக்குமார்.  தற்போது காமெடி, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகின்றார்.

இந்த நிலையில்,  ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,

இப்போ வெளிவரும்  திரைப்படங்கள் தியேட்டரில் ஒருநாள் பார்த்துவிட்டு டிவியில் மீண்டும் பார்த்தால் போர் அடிச்சிடும். ஆனால் என்னுடைய திரைப்படங்கள் எத்தனை முறை டிவியில் பார்த்தாலும் மக்கள் இன்னும் உட்கார்ந்து போர் அடிக்காமல் பார்க்கின்றார்கள். இன்னும் 50 வருஷம் ஆனால் கூட பார்ப்பார்கள்  என்று  தெரிவித்துள்ளார். 




Advertisement

Advertisement