2016 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்ற பணமதிப்பிழப்பீன் காட்சிகளும், அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் நல்லபடியாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை கண்கலங்க வைத்தன. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியானது. அந்தப் படமும் ஹிட் கொடுத்தது. அதன்பின் பிச்சைக்காரன் படத்தின் மூன்றாவது பாகமும் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குநர் சசி இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளதோடு அடுத்த ஆண்டு மே மாதம் முதலாம் தேதி இந்த படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தார். எனினும் இது பிச்சைக்காரன் படத்தின் மூன்றாவது பாகமா? அல்லது புதிய படமா? என்பதில் ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள சக்தி திருமகன் படத்தின் ப்ரோமோஷனில் விஜய் ஆண்டனி தன்னைப்பற்றி வழங்கிய பேட்டி தற்போது வைரலாகி உள்ளது.
அதில் தொகுப்பாளினி ஒருவர் விஜய் ஆண்டனியிடம், டைரக்டரா இருக்கும் நீங்க, நடிகராக இருக்கும் விஜய் ஆண்டனி பற்றி என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்று கேட்க,
நடிகராக இருக்கும் விஜய் ஆண்டனியை எனக்கு பிடிக்காது. பிச்சைக்காரன் 2 நான் பண்ணியிருக்க வேண்டியது இல்லை. ஆனால் நான் பண்ணினா அது பிராண்ட் ஆகும் என்பதால் தான் அதில் நடித்தேன் என்று சொன்னார்.
அதே நேரத்தில் நடிகராக இருக்கும் விஜய் ஆண்டனியிடம் டைரக்டர் விஜய் ஆண்டனி பற்றி சொல்லுமாறு கேட்க, டைரக்டரா இருக்கும் விஜய் ஆண்டனிய எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நல்ல டைரக்டர் என்று தெரிவித்தார்.
Listen News!