• May 10 2024

தளபதி 67 படத்தில் கமல் இடம்பெற இதுதான் காரணமா ?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி 67 திரைப்படத்தில் கமல் நடிப்பதற்கான காரணம் பற்றி வெளியான தகவல்

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. அத்தோடு  இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியானது. கொரோனா காலகட்டத்தில் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது

அத்தோடு மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் நடித்தார்.மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். இவ்வாறுஇருக்கையில் தற்போது கமல் மற்றும் லோகேஷின் வெற்றி கூட்டணி தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளது. எனினும் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் இப்படத்தை முடித்துவிட்டு தளபதி 67 திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், அனிருத் மற்றும் த்ரிஷா ஆகியோர் இந்த பூஜையில் கலந்துகொண்டதாக தெரிகின்றது. அத்தோடு  இதைத்தொடர்ந்து இப்படத்தின் போட்டோஷூட் நாளை நடைபெறும் என்றும், ப்ரோமோ ஷூட் நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் வந்துள்ளது. விக்ரம் படத்தின் ப்ரோமோ போலவே தளபதி 67 படத்தின் அறிவிப்பும் ஒரு ப்ரோமோவின் மூலம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

இவ்வாறுஇருக்கையில் கடந்த சில நாட்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தளபதி 67 திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வந்த வண்ணம் இருந்தன. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ரோலில் சூர்யா நடித்ததைப்போல தளபதி 67 படத்தில் கமல் ஒரு ரோலில் நடிக்கவுள்ளார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றி ஒரு மூத்த பத்திரிகையாளர் பேசுகையில், கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றார் கமல். அதன் காரணமாக தான் விஜய்யின் படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் என அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement